உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரூ.4.21 லட்சம் பறிமுதல்

ரூ.4.21 லட்சம் பறிமுதல்

திருச்சுழி,- திருச்சுழி அருகே ஒரு வீட்டில் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.திருச்சுழி அருகே தமிழ்பாடியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் 43. இவர் லோடுமேன்களுக்கு ஏஜென்டாக உள்ளார். இவர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் உள்ளதாக கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகன் தலைமையில், மாயகிருஷ்ணன் வீட்டை சோதனை செய்தனர்.அங்கு எந்தவித ஆவணங்கள் இன்றி 3 லட்சத்து 70 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்க பணம் இருந்தது தெரிந்தது. பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து திருச்சுழி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.- - * அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர். நேற்று மாலை அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் வியாபாரி துரைராஜ் உரிய ஆவணங்கள் இன்றி 51 ஆயிரத்து 210 ரூபாய் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்து அருப்புக்கோட்டை துணை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை