உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் ரோட்டோரத்தில் குப்பை தடுக்க 60 அடி நீளம் விளம்பர பதாகை

சிவகாசியில் ரோட்டோரத்தில் குப்பை தடுக்க 60 அடி நீளம் விளம்பர பதாகை

சிவகாசி: சிவகாசியில் ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் புதிய முயற்சியாக 60 அடி நீளத்திற்குவிளம்பர பதாகை வைக்கப்பட்டது.சிவகாசி மாநகராட்சியில் பெரும்பான்மையானமுக்கிய சந்திப்புகள் ரோட்டோரங்களில் குப்பை கொட்டப்பட்டு வருகின்றது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினாலும் மீண்டும்மீண்டும் குப்பை கொட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. இதேபோல் சிவகாசி பள்ளபட்டி செல்லும் ரோட்டோரத்தில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் அந்த இடத்தில் கொட்டப்பட்ட குப்பை முழுமையாக அகற்றப்பட்டது. தொடர்ந்து பசுமையை வலியுறுத்தியும் துாய்மையை வலியுறுத்தியும், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்ட 60 அடி நீள விளம்பர பதாகை அங்கு வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து அப்பகுதியில் குப்பை கொட்டுவது தடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ