உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பபையிலிருந்த 6.5 கி. கட்டி அகற்றம் டீன் சீதாலட்சுமி சாதனை

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பபையிலிருந்த 6.5 கி. கட்டி அகற்றம் டீன் சீதாலட்சுமி சாதனை

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சபரிகுமாரி 44, கர்ப்பபையில் இருந்த 6.5 கி கட்டியை டீன் சீதாலட்சுமி தலைமையிலான மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.கன்னியாகுமரி தெற்கு கருங்குளத்தைச் சேர்ந்தவர் சபரிகுமாரி. இவர் 16 ஆண்டுகளுக்கு முன்பு குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்து உள்ளார். இவருக்கு கடந்த பத்து ஆண்டுகளாக வயிற்று வலி, வயிறு வீக்கம் இருந்தது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக வயிற்று வலி, உதிரப்போக்கால் அவதிப்பட்டு வந்தார்.இவரை மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்ததில் கர்ப்பபையில் 20 செ.மீ., 25 செ.மீ., அளவுகளில் இரண்டு கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது.மேலும் தைராய்டு, இருதயக்கோளாறு, சர்க்கரை வியாதி இருந்ததும் தெரியவந்தது. ரத்தத்தின் அளவு 6 கிராம் மட்டுமே இருந்தது. இவருக்கு டீன் சீதாலட்சுமி தலைமையில் மருத்துவர்கள் சுதா, உமா மகேஸ்வரி, சுஜீதா இணைந்து கர்ப்பபையில் இருந்த இரண்டு கட்டிகளையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.இந்த கட்டிகள் மொத்தம் 6.5 கி எடை இருந்தது. மேலும் 9 பாட்டில் ரத்தம், 4 பாட்டில் தட்டணுக்கள், 4 பாட்டில் ரத்தம் உறைவதற்கான ரத்த அணுக்கள்அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டது. இவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்து நலமுடன் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை