உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீதிமீறல்  வாகனங்கள் மீது மே மாதம் 767 வழக்குகள்

வீதிமீறல்  வாகனங்கள் மீது மே மாதம் 767 வழக்குகள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மே மாதம் மட்டும் மோட்டார் வாகன விதிகள் மீறி இயங்கிய வாகனங்களுக்கு 767 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.மே மாதத்தில் வாகனத்திற்கு தேவையான வரிகள் செலுத்தாத வண்டிகளுக்கு ஸ்பாட்டிலே ரூ.4 லட்சத்து 98 ஆயிரத்து 077 வசூலிக்கப்பட்டது. இதே போல் விதிமீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 14,95,435 அந்த ஸ்பாட்டிலே வசூலிக்கப்பட்டது. மேலும் வெளியூர் வாகனங்களுக்கு ரூ.28,71,300 ரூபாய் அபராத தொகையாகநிர்ணயிக்கப்பட்டது.மொத்தத்தில் மே மாதத்தில் மட்டும் ரூ.48,64,807 அபராதம் விதிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.மே மாதத்தில் அதிக எடை ஏற்றிய சரக்கு வாகனங்களுக்கு 61 தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டு ரூ.20,17,000 அபராதமாக நிர்ணயிக்கப்பட்டு ரூ.1,93,000 வசூலிக்கப்பட்டது. இதே போல் அதிவேகமாக இயங்கி வாகனங்கள் 31, அதிக ஆட்கள் ஏற்றியது 72, புகை சான்று இல்லாதது 54, சீட் பெல்ட் அணியாதது 65, குடிபோதையில் வாகனம் இயக்கியது 2 , ஹெல்மெட் அணியாதது 41, அலைபேசி பேசி கொண்டே இயக்கியது 13 என மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகள் மீறிய வாகனங்களுக்கு 767 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ கூறியதாவது: சாலை போக்குவரத்து விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தை சாலை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும். அனைவரும் நினைத்தால் தான் செய்ய முடியும். விபத்துக்களை குறைக்க முடியும். அதற்கு அனைவரும் தவறாது அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் சாலை, மோட்டார் விதிகளை பின்பற்ற வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்