உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலையில் தீ விபத்து

பட்டாசு ஆலையில் தீ விபத்து

சாத்துார்: ஏழாயிரம்பண்ணை சானான்குளம் வி.பி.எம். பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. முத்தாண்டியாபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் கண்ணன் இவருக்கு சொந்தமான வி.பி.எம். பட்டாசு ஆலை சானான்குளத்தில் உள்ளது.நாக்பூர் லைசன்ஸ் பெற்ற இந்த ஆலையில் நேற்று மதியம் 12:30 மணிக்கு மணி மருந்து கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு அறை எண் 8ல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.உடனடியாக தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறினர். ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அறைகள் சேதம் அடையவில்லை. யாரும் காயமடையவில்லை. ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை