உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

விருதுநகர் : ஆமத்துார், மீசலுார் கிராமங்களில் வண்டிப்பாதைகள், நீர்வரத்து ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்பை உறுதி செய்த பின்னும் வருவாய்த்துறை அகற்றாமல் இருப்பதை கண்டித்து விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தமிழ் விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சுப்பாராஜ், மாவட்ட செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். இந்நிலையில் விரைவில் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக வருவாய்த்துறையினர் கூறியதை அடுத்து மதியம் 2:00 மணியோடு போராட்டம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை