| ADDED : ஜூன் 12, 2024 06:08 AM
நரிக்குடி : நரிக்குடி கொட்ட காட்சியேந்தலைச் சேர்ந்த முனியாண்டி 44. சிவகங்கை மாவட்டம் பழையனூர் கிடாக்குழியை சேர்ந்த இந்துராணியை திருமணம் செய்தார். ஒரு மகன், மகள் உள்ளனர். இந்துராணிக்கும் வாகைகுளத்தைச் சேர்ந்த மூர்த்திக்கும் தொடர்பு இருந்ததால் அவரை பிரிந்தார் முனியாண்டி. இந்நிலையில் முனியாண்டி பெயரில் உள்ள வீடு, சொத்துக்களில் மனைவி பங்கு கேட்டார். கொடுக்க மறுத்ததால் நேற்று முன்தினம் இரவு கொட்டக்காட்சியேந்தலில் சகோதரி ராஜலட்சுமி வீட்டில் இருந்த அவரை மனைவி குடும்பத்தினர் அரிவாளால் வெட்டினர். அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தடுக்கச் சென்ற ராஜலட்சுமி, சிறுமி ஜீவிதாவுக்கும் காயம் ஏற்பட்டது. மனைவி இந்துராணி, அவரது தந்தை குண்டுமலை, உறவினர்கள் கருப்பு ராஜா, ஆசை, மாயா முனியாண்டி ஆகியோர் மீது நரிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.