உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொன்மையும், சிறப்பும் வாய்ந்த ஆண்டாள் கோயில்

தொன்மையும், சிறப்பும் வாய்ந்த ஆண்டாள் கோயில்

108 திவ்ய தேசங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள திருத்தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற வைணவ திருத்தலங்களுக்கு இணையாக போற்றப்படுவது ஆண்டாள் கோயிலின் சிறப்பு.ஆண்டாளின் திருப்பாவை இல்லாமல் எந்த ஒரு திவ்ய தேசத்திலும் பூஜைகள் நடைபெறுவது கிடையாது . எல்லாவற்றிற்கும் ஆண்டாள் முதன்மை பெற்று பெருமாளுக்கு இணையான அந்தஸ்து பெற்றிருப்பதும், தேரோட்டத்தில் ரெங்கமன்னாருடன் பவனி வந்து அருள் பாலிப்பதும் உலகெங்கும் காண முடியாத ஒரு வைபவம்.தமிழ்நாடு அரசு ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தினை இலச்சினையாக கொண்டிருப்பதும், பெரிய பெருமாள் எனும் வட பத்ரசயனர் பெருமாளாக எழுந்தருள்வதும், ஆழ்வார் பெருமக்களில் நாராயணனுக்கு பல்லாண்டு பாசுரம் பாடிய பெரியாழ்வார் என்று போற்றப்படும் விஷ்ணு சித்தர் திருவாய்மொழி இயற்றியதும், பெரியகுளம் என்று அழைக்கபடும் திருமுக்குளம் அமைக்கப்பட்டு இருப்பதும் இத்திருத்தலத்தின் தனி சிறப்புகள். ராமாயணம், மகாபாரதம் சிற்பங்களும், ஆழ்வார் மற்றும் ஆகமக்கலை சிற்பங்களுடனும் அலங்காரத்துடன் கூடிய இங்குள்ள தேரின் உயரம் 75 அடியாகும்.1982 க்கு முன்பு 9 சக்கரங்கள் கொண்டிருந்தது. தேர் நிலைக்கு வருவதற்கு பல நாட்கள் ஆனது. திருச்சி பெல் நிறுவனத்தினர் உதவியுடன் தற்போது நான்கு இரும்பு சக்கரங்கள் மற்றும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டு எங்களது ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்ட இரும்பு பிளேட்டுகளின் உதவியுடன் புல்டோசர் பயன்படுத்தபட்டு பக்த கோடி பெருமக்கள் ஊர் கூடி தேர் இழுத்து 4 மணி நேரத்தில் நிலைக்கு கொண்டு வரப்படுகிறது. 2000ல் நடந்த கோயில் மகா கும்பாபிஷேகத்தை அதன் கமிட்டி தலைவராக இருந்த எனது தந்தை ராமசுப்பிரமணிராஜா நடத்தி முடித்தார். 2015ல் வடபத்ரசயனர் கோயில் கும்பாபிஷேகம், மேலும் நாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் மூலமாக பக்தர்களின் நன்கொடையினால் தங்க விமானம் செய்து அதை 2016ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறச் செய்தார்.தற்போது ரூ. 25 லட்சம் மதிப்பில் கோயில் யானை ஜெயமால்யதா தங்குவதற்கான கூடாரம், குளியல் சவர், தண்ணீர் தொட்டி, ரூ. 10 லட்சம் மதிப்பில் ஆண்டாள் திருத்தேரில் ஸ்டீல் கொடுங்கைகள் அமைக்கும் பணிகளை எங்களது ராம்கோ சிமென்ட் நிறுவனம் செய்துள்ளது. --பி.ஆர். வெங்கட்ராம ராஜாஅறங்காவலர் குழு தலைவர் நாச்சியார் ஆண்டாள் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்சேர்மன், ராம்கோ குரூப் தொழில் நிறுவனங்கள், ராஜபாளையம்.தலைவர், நாச்சியார் சாரிட்டி டிரஸ்ட், ஸ்ரீவில்லிபுத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ