உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தர்பூசணி வரத்து அதிகரிப்பு ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்

தர்பூசணி வரத்து அதிகரிப்பு ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்

சாத்துார் : சாத்துாரில் தர்பூசணி வரத்து அதிகரித்து இருப்பதால் கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லுகின்றனர்.கோடை வெயில் கடந்த சில வாரங்களாக வெளுத்து வாங்கும் நிலையில் சாத்துாரில் தர்பூசணி வரத்து அதிகரித்து உள்ளது. கிலோ ரூ20-க்கு விற்கப்படுவதால் கோடை வெப்பத்தை சமாளிக்க உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தர்பூசணியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்லுகின்றனர்.சாலையின் ஓரங்களில் பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. சென்ற ஆண்டு கிலோ ரூ 30 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை ரூ 10 குறைந்திருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக அதை வாங்கி செல்லுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்