உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் நாளை ஆண்டாள் தேரோட்டம்

ஸ்ரீவி.,யில் நாளை ஆண்டாள் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா நாளை நடக்கிறது. இதையொட்டி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா நாளை காலை 9:05 மணிக்கு துவங்குகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு திருத்தேருக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 9:05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.இந்நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதன்படி மதுரை வழித்தடத்தில் வரும் வாகனங்கள் ராமகிருஷ்ணாபுரம், சர்ச் சந்திப்பு, சிவகாசி ரோடு, ரயில்வே ஸ்டேஷன், தாலுகா அலுவலகம், தேரடி, ஆண்டாள் தியேட்டர், மடவார் வளாகம் வழியாக ராஜபாளையம் செல்ல வேண்டும்.ராஜபாளையத்திலிருந்து மதுரை செல்லும் வாகனங்கள் புதுப்பட்டி, மம்சாபுரம், சீனியாபுரம் சந்திப்பு, ஆத்து கடை, ராமகிருஷ்ணாபுரம் வழியாக மதுரை செல்ல வேண்டும்.ராஜபாளையத்தில் இருந்து சிவகாசி செல்லும் வாகனங்கள் புதுப்பட்டி, மம்சாபுரம், ஆத்து கடை, ராமகிருஷ்ணாபுரம், சர்ச் சந்திப்பு வழியாக சிவகாசி செல்ல வேண்டும்.சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் பஸ்கள் வழக்கம் போல் வரலாம். ஆனால், ராஜபாளையம் செல்லும் பஸ்கள் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, தாலுகா அலுவலகம், தேரடி, ஆண்டாள் தியேட்டர், மடவார் வளாகம் வழியாக ராஜபாளையம் செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்