மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
காரியாபட்டி: காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் மதுரை, அருப்புக்கோட்டை செல்லும் பஸ்களை எதிரெதிரே நிறுத்துவதால் மற்ற வாகனங்கள் கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. பயன்பாடின்றி இருக்கும் நிழற்குடையை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து, அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.காரியாபட்டியில் மதுரை, அருப்புக்கோட்டை செல்லும் பஸ்களை பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே ஒரே இடத்தில் எதிரெதிரே நிறுத்துகின்றனர். இட நெருக்கடியால் மற்ற வாகனங்கள் பஸ் ஸ்டாண்டை கடந்து செல்ல முடியாமல் காலதாமதம் ஆகிறது. அவசரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. இப்பிரச்னை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் ரூ. பல லட்சம் செலவு செய்து புதிய நிழற்குடை கட்டப்பட்டது. அருப்புக்கோட்டை செல்லும் பஸ்களை நிழற்குடை அருகே நிறுத்துவது என்றும், மதுரை செல்லும் பஸ்களை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நிறுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதை செயல்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது நிழற்குடை பயன்பாடு இன்றி சேர்கள் உடைந்து பயணிகள் சிரமப்பட்டு உட்கார வேண்டியதுள்ளது. அப்பகுதியில் டூவீலர்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை ரோட்டோரங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நிழற்குடை அருகே டூவீலர்கள் மற்ற வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைந்த சேர்களை சரி செய்து நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, அருப்புக்கோட்டை செல்லும் பஸ்களை அங்கே நிறுத்தவும், அதே போல் மதுரை செல்லும் பஸ்களை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்தால் மற்ற வாகனங்கள் பஸ் ஸ்டாண்டை கடப்பதில் எந்த சிரமமும் இருக்காது. போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது என்பதால் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago