உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தடுப்புச்சுவர் சேதம்

தடுப்புச்சுவர் சேதம்

சிவகாசி : சிவகாசி ரயில்வே பீடர் ரோடு வேலாயுத ரஸ்தா முக்கில் ஓடையில் உள்ள பாலத்தில் சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்.சிவகாசி ரயில்வே பீடர் ரோடு வேலாயுத ரஸ்தா 4 விலக்கு ரோட்டில் இருபுறமும் ஓடையில் பாலம் உள்ளது. திறந்த நிலையில் உள்ள இந்த ஓடையில் இருபுறமும் தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளது.எப்பொழுதும் போக்குவரத்து மிகுந்த இப்பகுதியில் பாலம் தடுப்புச்சுவர் சேதத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.அதிகமான போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் பாலத்தின் தடுப்பு சுவர் சேதம் அடைந்திருப்பதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே இருபுறமும் பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி