உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

சிவகாசி : சிவகாசி இரட்டை பாலம் விலக்கிலிருந்து அரசு மருத்துவமனை செல்லும் வழியில் பெரியகுளம் கண்மாய் கரையில் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. அதன்படி இந்தத் தொட்டியில் இருந்து ஆயில் மில் காலனியில் உள்ள 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.இந்நிலையில் இரட்டைப் பாலம் விலக்கிலிருந்து அரசு மருத்துவமனை செல்லும் வழியில் பெரியகுளம் கண்மாய் கரை அருகில் குழாய் உடைந்துள்ளது. இதிலிருந்து குடிநீர் நீரூற்று போல பீய்ச்சி அடித்து வீணாக வெளியேறுகிறது.நான்கு வாரமாக இதே போல் குடிநீர் வீணாவதால் ஆயில் மில் காலனியில் உள்ள தொட்டிக்கு குடிநீர் முழுமையாக செல்லாமல் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இரட்டைப் பாலம் அருகில் உடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை