| ADDED : ஜூலை 01, 2024 05:59 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் காரீப் பருவத்தில் நடவு செய்யப்படும் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு மக்காச்சோளம் ரூ.421, சோளம் ரூ.180, பாசிப்பயறு, உளுந்து ரூ.304, பருத்தி ரூ.360, நிலக்கடலை ரூ.415, வெங்காயம் ரூ. 1744, வாழை ரூ. 3404 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் நிலக்கடலைக்கு ஆக. 30, உளுந்து, பாசிப்பயறு, சோளம், பருத்தி வகைகளுக்கு செப். 16, மக்காச்சோளத்திற்கு செப். 30க்குள், வெங்காயத்திற்கு ஆக. 31, வாழைக்கு செப். 16, க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இத்திட்டத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, கட்டணத்தொகை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளாலாம், என்றார்.