உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேம்பாலத்தில் கார்கள், கட்டுமானப் பொருட்கள் வாகன ஓட்டிகள் அவதி

மேம்பாலத்தில் கார்கள், கட்டுமானப் பொருட்கள் வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர் : விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் மேம்பாலத்தில் கார்கள், வீட்டின் கட்டுமானப்பொருட்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை செல்வதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது.இதில் நகராட்சி பகுதியில் இருந்து செல்லும் மேம்பாலத்தின் துவக்கத்தில் கார்கள் நிறுத்துவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.இங்கு சில சமயங்களில் நகராட்சி துாய்மை பணி வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. இது போன்ற செயல்கள் போக்குவரத்து நிறைந்த காலை, மாலை நேரங்களில் நடப்பதால் அவ்வழியாக வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும் மேம்பாலத்தின்அருகே செல்லும் சர்வீஸ்ரோடுகள் குறுகலாக இருப்பதால் அங்கு உள்ள வீடுகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும்சிலர் கட்டுமானப்பொருட்களை மேம்பாலத்தில் வைத்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர். சிமெண்ட் சாக்குகளில் மண்ணை நிரப்பி கிரஷர் மண் கொட்டிய இடத்தை சுற்றி வைத்துள்ளனர்.இதனால் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் வாகன ஓட்டிகள் மண் கொட்டியது தெரியாமல் சென்று மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே நகராட்சி நிர்வாகம் அருப்புக்கோட்டை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதை தடுத்து, கொட்டப்பட்ட மண்ணை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ