உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுாலகம் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நுாலகம் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : விருதுநகர் மாவட்டம் கம்பிக்குடி முருகன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கம்பிக்குடி ஊராட்சியின் கீழ் சில கிராமங்கள் உள்ளன. பள்ளி மாணவர்கள், பட்டதாரிகள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக 12 கி.மீ.,துாரத்திலுள்ள காரியாபட்டி நுாலகம் செல்ல வேண்டியுள்ளது. தமிழக அரசின் திட்டத்தின் கீழ் கிராமங்களில் நுாலகம் அமைக்கப்படுகிறது. கம்பிக்குடியில் நத்தம் புறம்போக்கு காலி இடம் உள்ளது. அங்கு நுாலகம் அமைக்கக்கோரி கலெக்டர், காரியாபட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: வட்டார வளர்ச்சி அலுவலர் 3 மாதங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை