உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விரைவில் கலெக்டர் அலுவலக பால பணிகள் துவக்கம்

விரைவில் கலெக்டர் அலுவலக பால பணிகள் துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்புள்ள நான்கு வழிச்சாலையில் விரைவில் பால பணிகள் துவங்க உள்ளது.விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்புள்ள நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 2010 முதல் இருந்து வருகிறது. சமூக ஆர்வலர்கள், கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். அப்போதே பாலம் வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில் 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கலெக்டர் அலுவலக பால பணிகளை துரிதப்படுத்த உள்ளதாக கூறினார். இந்நிலையில் 2022 மார்ச்சில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து திட்டமிடல் செய்து வந்தனர். அது டில்லிக்கு அனுப்பப்பட்டது.அதில் திருத்தம் கேட்டு மறு திட்டமிடல் கேட்கப்பட்ட நிலையில் அதற்கான நேரம் ஒதுக்கி புதிய அறிக்கையை அனுப்பினர். தற்போது பாலம் கட்ட ரூ.20 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் துவங்க உள்ளது எனவும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை