உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வார விடுமுறை வழங்குவதில் தொடரும் குழப்பம் போலீசார் குமுறல்

வார விடுமுறை வழங்குவதில் தொடரும் குழப்பம் போலீசார் குமுறல்

விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் வார விடுமுறை உரிய நாளில் வழங்கப்படாமல் மற்றொரு நாள் வழங்குவது தொடர் கதையாக இருப்பதால் குடும்பத்தினருக்காக நேரம் செலவிட முடியாமல் போலீசார் பரிதவித்து வருகின்றனர்.மாவட்டத்தில் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றுபவர்களை முக்கியஸ்தர்கள் வருகை, ஆர்ப்பாட்டம், ஊர்வலம், கோயில் திருவிழாக்களில் அசாம்பாவித சம்பவங்கள் தடுத்தல், சோதனை என தொடர் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஸ்டேஷன் வேலைக்கு ஆட்கள் இல்லாத சமயத்தில் வார விடுமுறை எடுப்பதை மற்றொரு நாள் எடுத்துக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் வார விடுமுறையை உரிய நாளில் எடுக்காமல் மற்றொரு நாள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் அதற்குள் அடுத்த வாரத்திற்கான விடுமுறை வந்து விடுகிறது. இப்படி ஒவ்வொரு வாரமும் பணி தொடர்வதால் வார விடுமுறை என்பது இல்லாமல் கிடைக்கும் சமயத்தில் விடுமுறை என்ற நிலைக்கு போலீசார் ஆளாகியுள்ளனர்.இரண்டு மாதங்கள் தேர்தல் பணிக்காக போலீசார் தொடர்ந்து பணியாற்றினர். தற்போது எல்லாம் முடிந்த பின்னரும் வார விடுமுறை என்பது சில ஸ்டேஷன்களில் உரிய நாளில் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குடும்பத்தினருக்காக நேரம் செலவிட முடியாத சூழல் இருப்பதால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் வார விடுமுறை உரிய முறையில் வழங்குவதை அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ