உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காங்., எம்.பி., நிதியில் பணி தி.மு.க., எம்.எல்.ஏ., பெயர் சேர்ப்பு மார்க்சிஸ்ட் கவுன்சிலர் எதிர்ப்பு

காங்., எம்.பி., நிதியில் பணி தி.மு.க., எம்.எல்.ஏ., பெயர் சேர்ப்பு மார்க்சிஸ்ட் கவுன்சிலர் எதிர்ப்பு

விருதுநகர்:விருதுநகர் பாத்திமா நகரில் நடந்து வரும் குடிநீர் தொட்டி பணிக்கு காங். எம்.பி., மாணிக்கம் தாகூர் நிதி ஒதுக்கிய நிலையில், கூட்டணி கட்சியான தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவாசன் பெயர் கல்வெட்டில் சேர்க்கப்பட்டது. இதற்கு அதே கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அவர்களின் பெயர் மறைக்கப்பட்டது.விருதுநகர் நகராட்சி 24வது வார்டில் பாத்திமா நகரில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க எம்.பி., நிதியில் மாணிக்கம் தாகூர் நிதி ஒதுக்கினார். இந்தாண்டின் துவக்கத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் ஆமைவேகத்தில் பணிகள் நடந்து தற்போது தான் இறுதி நிலையை எட்டி உள்ளது.இதற்கான கல்வெட்டில் தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவாசன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. எம்.பி., நிதியில் எம்.எல்.ஏ., பெயர் சேர்ப்பது எப்படி நியாயமாகும் என மார்க்சிஸ்ட் கவுன்சிலர் ஜெயக்குமார் நகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் கல்வெட்டில் எம்.எல்.ஏ., பெயர், எம்.பி.,யின் பெயர், திட்ட விவரங்கள், நிதி ஒதுக்கீடு விவரங்களை மறைத்து தாளை ஒட்டியுள்ளனர்.இதுகுறித்து கவுன்சிலர் ஜெயக்குமார் கூறியதாவது: எம்.பி., நிதியில் நடக்கும் பணியில் எம்.எல்.ஏ., பெயரை சேர்க்கும் நடைமுறை இதுவரை இல்லை. எம்.எல்.ஏ., நிதியில் எம்.பி., பெயரை போடுவார்களா. புதிய பழக்கத்தை ஏற்படுத்துவது சரியல்ல என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ