உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோரிக்கை அட்டை அணிந்து மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்

கோரிக்கை அட்டை அணிந்து மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்களும், பணியாளர்களும் கோரிக்கை அட்டை அணிந்து வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை