உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெரிய கண்மாய் பாலத்தில் அரிப்பு

பெரிய கண்மாய் பாலத்தில் அரிப்பு

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் வழியாகச் செல்லும் பாலம் மழை அரிப்பால் சேதமடைந்து வலுவிழக்கும் அபாயம் உள்ளது.அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் நகராட்சிக்கு அருகில் பெரிய கண்மாய் உள்ளது. இதன் வழியாக நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் வழியாக தினமும் 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்லும். பந்தல்குடி, எட்டயபுரம் தூத்துக்குடி, திருச்செந்துாருக்கு இந்த பாலம் வழியாக செல்லலாம். முக்கியமான இந்த பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், அருப்புக்கோட்டையில் இருந்து பாலத்தின் நுழைவுப் பகுதி யில் இடது பக்கம் ரோட்டின் கீழே அரிப்பு ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் போது பாலம் உடைந்து விடும் அபாயம் உள்ளது. தொடர்ந்து கன மழை பெய்யும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள அரிப்பை உடனடியாக சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ