உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தடுப்பணை சேதத்தால் தேக்கும் திறன் குறையுது

தடுப்பணை சேதத்தால் தேக்கும் திறன் குறையுது

விருதுநகர் : விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி புதுாரில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல் தடுப்பணை முழுவதும் உடைந்து பாழாகியுள்ளது.இந்த கல் தடுப்பணை கட்டிய பின் மழை நீரை சேமித்து மக்கள் பயன்படுத்தினர். நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது. ஆனால் தடுப்பணை முறையாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே சேதமாகி கற்கள் சேதமாகி பாழானது. மேலும் கண்மாய் கரைகளில் கல் சுவர்களை கட்டுவதற்காக தடுப்பணை கற்களை பெயர்த்து எடுத்து பயன்படுத்தியதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.இதனால் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதை சீரமைத்து நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கண்மாயில் மராமத்து பணிகளை செய்ய உள்ளதால் நீரை சேமிக்க முடியாத நிலை தொடர்கிறது.எனவே மாவட்ட நிர்வாகம் அம்மன்கோவில்பட்டி புதுாரில் சிதிலமடைந்த தடுப்பணையை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி