| ADDED : ஆக 05, 2024 07:29 AM
விருதுநகர் : பேவர் பிளாக் கற்கள் சேதம், அடிகுழாய் பழுது, வாறுகால்களில் துார்நாற்றம், அதன் தடுப்புகள் சேதம் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர் விருதுநகர் பவுண்டுத்தெரு மக்கள்.விருதுநகரின் முத்துராமன்பட்டி பவுண்டுத்தெருவிற்கு ஒரு பிரதான தெரு, பத்துக்கும் மேற்பட்ட குறுக்குத்தெருக்கள் உள்ளன. இப்பகுதியின் பிரதான தெருவின் பேவர் பிளாக் ரோடு பெயர்ந்து மண் ரோடு போல் மாறி உள்ளது. குறுக்குத்தெருவில் அடிகுழாய் பழுதாகி பல ஆண்டுகளாகியும் சரிசெய்யவில்லை. இங்கு பாதாளச்சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு வாறுகால் முறையாக பராமரிக்கப்படவில்லை.வீடுகளில் இருந்து வெளியேறும் நீர் வாறுகாலில் செல்வதற்காக அமைக்கப்பட்ட குழாய்கள் வழியாக மழைக்காலத்தில் கழிவு நீர் வந்து வீடுகளின் முன்பு தேங்குகிறது. இங்குள்ள ரேஷன் கடைக்கு அருகே செல்லும் வாறுகாலில் தடுப்புகள் சேதமாகியுள்ளது.இதனால் இரவு நேரத்தில் டூவீலரில் வேகமாக வருபவர்கள் வாய்க்காலில் விழுந்து காயமடையும் நிலை உள்ளது. மேலும் முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் துார்நாற்றம் வீசுகிறது.இப்பகுதியில் பத்து நாளைக்கு ஒரு முறை விநியோகிக்கப்படும் குடிநீரும் முன் அறிவிப்பின்றி சில சமயத்தில் அதிகாலை 3:00 மணிக்கு வருகிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் சில வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது, அந்த குழாய்களிலும் இதுவரை குடிநீர் வரவில்லை.இப்பகுதியின் பிரதான தெருக்கள், குறுக்குத்தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் அமைக்கப்பட்டு, தற்போது முழுவதும் சேதமாகியுள்ளது. இதை சீரமைத்து வாகனங்களில் சிரமமின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சோலையம்மாள், குடும்பத் தலைவி.பவுண்டுத்தெருவின் குறுக்குத்தெருவில் அமைக்கப்பட்ட அடி குழாய் சேதமாகி பல ஆண்டுகள் ஆகிறது. இந்த அடிகுழாய் இருக்கும் இடத்தில் புதிதாக குடிநீர் தொட்டி அமைத்து மக்களுக்கு தேவையான நீரை வழங்க வேண்டும்.-ஸ்ரீனிவாசன் செல்வராஜ், ஓய்வு தனியார் ஊழியர்.
குடிநீர் தொட்டி வேண்டும்
இங்குள்ள வாறுகால்கள் கட்டி பல ஆண்டுகளாகிறது. பாதாளச்சாக்கடை மேன்ஹோல்கள் ரோடு மட்டத்தில் இருந்து சற்று உயரம் கூடுதாலாக இருப்பவற்றை ரோடு மட்டத்திற்கு அமைக்க வேண்டும். பழைய வாறுகால்களை புதிய வாறுகால்களாக கட்ட வேண்டும்.- சங்கரேஸ்வரி, குடும்பத் தலைவி.
புதிய வாறுகால்கள் அவசியம்
புதிய வாறுகால்கள் அவசியம்