| ADDED : ஜூன் 13, 2024 05:10 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு தேருக்கு நாள் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இக்கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம், ஜூலை 30ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆக.7ல் தேரோட்டம் நடக்கிறது.இதனை முன்னிட்டு நேற்று காலை 6:30 மணிக்கு தேருக்கு நாள் செய்யும் நிகழ்ச்சி, தேரின் முன்பு நடந்தது. பாலாஜி பட்டர் தலைமையில் கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் தேரின் மேல் அலங்காரம் செய்வதற்கான மரத்தூண்கள் நடப்பட்டது. இதே போல் செப்புத்தேர், 16 சக்கர வண்டி சப்பரத்திற்கும் நாள் செய்யும் விதமாக பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து தேரினை சீரமைக்கும் பணி துவங்கியது.விழாவில் வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகம் ரமேஷ், மணியம் ஸ்ரீராம், திருவிழா மண்டக படிதாரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.