உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருக்கன்குடியில் உலா வரும் நாய்களால் பக்தர்கள் முகம் சுளிப்பு

இருக்கன்குடியில் உலா வரும் நாய்களால் பக்தர்கள் முகம் சுளிப்பு

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சொறி பிடித்த நிலையில் உலா வரும் நாய்களால் பக்தர்கள் முகம் சுளிப்புக்கு ஆளாகின்றனர்.இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தற்போது ஆடி மாதம் என்பதால் நாள்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். இந்த நிலையில் கோயில் பகுதியில் உலா வரும் சொறி பிடித்த நாய்கள் கோயில் வளாகத்தில் அறுக்கப்படும் ஆடு, கோழி இறைச்சிகளையும், இறைச்சிக் கழிவுகளையும் உண்பதால் நாய்களுக்கு உடலில் தோல் நோய் ஏற்படுகிறது.கோயிலுக்கு வரும் பக்தர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் உலா வரும் நாய்களால் தொற்று நோய் மனிதர்களுக்கு பரவும் அபாயமும் உள்ளது. இதனால் நோய் பிடித்த நாய்களை அங்கிருந்து அப்புறபடுத்த வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி