உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெ.சி.,சிதம்பரம் தெருவில் அவல நிலையில் கழிப்பிடம்

பெ.சி.,சிதம்பரம் தெருவில் அவல நிலையில் கழிப்பிடம்

விருதுநகர்: விருதுநகர் பெ.சி., சிதம்பரம் தெருவில் திறக்கப்பட்ட ஆண்கள் நவீன கழிப்பிடத்தில் சிறுநீர் வெளியேறும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு துார்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அசுத்தமாக இருப்பதால் உள்ளே செல்வதற்கே முகம் சுழிக்க வேண்டியுள்ளது. இதில் போதிய சுகாதாரமின்றி உள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர். இதனால் திறந்த வெளி கழிப்பிடங்கள் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நவீன கழிப்பிடத்தில் உள்ள குறைகளை சரிசெய்து பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ