உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எலக்ட்ரிக் டெட்டனேட்டர், நைட்ரேட் மிக்சர் அருகருகே இருந்ததால் வெடி விபத்து 4 பேர் மீது வழக்கு: இருவர் கைது

எலக்ட்ரிக் டெட்டனேட்டர், நைட்ரேட் மிக்சர் அருகருகே இருந்ததால் வெடி விபத்து 4 பேர் மீது வழக்கு: இருவர் கைது

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூர் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் பலியானதற்கு எலக்ட்ரிக் டெட்டனேட்டர், நைட்ரேட் மிக்சர் வெடிமருந்து அருகருகே இருந்ததே காரணம் என தெரியவந்துள்ளது. 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருவரை போலீசார் கைது செய்தனர்.காரியாபட்டி ஆவியூரில் கல்குவாரியில் வெடி மருந்து குடோன் செயல்பட்டு வந்தது. இதனை மினி வேனில் 3 தொழிலாளர்கள் ஏற்றினர். அப்போது பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து நடந்தது. இதில் கந்தசாமி, பெரியதுரை, குருசாமி உடல் சிதறி பலியாகினர். உடல்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வீசி எறியப்பட்டது.மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காதது, உயர் ரக வெடி மருந்துகள் இறக்கும் இடத்தில் கண்காணிப்பு அலுவலர் இல்லாதது, குடோனில் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் வெடி மருந்து ஏற்றிய ஒரு மினி வேன், நைட்ரேட் மிக்சர் வெடிமருந்து ஏற்றிய மற்றொரு மினி வேனையும் அருகருகே வைத்து லோடு ஏற்றியது தான் காரணம் என தெரியவந்தது.இது போன்ற வெடி மருந்துகள் அருகருகே வைத்து இறக்கினாலோ ஏற்றினாலோ வெடி விபத்து ஏற்படும். அஜாக்கிரதையாக, கவனக்குறைவாக இருந்ததாக குடோன் உரிமையாளர் ராஜ்குமார், கிரஷர் உரிமையாளர்கள் ராம்ஜி, சேது, ராமமூர்த்தி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, சேது, ராஜ்குமாரை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்