உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செண்பகத்தோப்பில் யானைகள் நடமாட்டம்

செண்பகத்தோப்பில் யானைகள் நடமாட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் கோயிலுக்கு வரும் மக்கள் மிகவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.கடந்த சில நாட்களாக மலையடிவாரத்தில் பேச்சியம்மன் கோயில், பேயனாற்று பகுதியில் மாலை நேரங்களில் யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. தற்போது மாந்தோப்பு பகுதியிலும், மக்கள் குளிக்கும் நீர்வரத்து ஓடை பகுதியிலும் யானைகள் வந்து செல்கிறது.இதனை கண்டறிந்த வனத்துறையினரும், யானைகளை மலைப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். ஆனாலும், மாலை நேரங்களில் யானைகள் வந்து செல்வதால் செண்பகத்தோப்பிற்கு வழிபாட்டிற்காக பக்தர்கள் வர தடை என வனத்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ