உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆங்கில வழிக்கல்வி  கொண்டுவர வலியுறுத்தல்

ஆங்கில வழிக்கல்வி  கொண்டுவர வலியுறுத்தல்

விருதுநகர் : சிவகாசி மாநகராட்சி 44வது வார்டு கவுன்சிலர் தங்கப்பாண்டிச்செல்வி, கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு:சிவகாசி மாநகராட்சி அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி உள்ளது. பிளஸ் 1, 2 வகுப்பிற்கு மட்டும் இல்லை. எனவே 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் இந்த கல்வியாண்டில் பள்ளியை விட்டு வெளியேறுகின்றனர். ஏழை மாணவர்கள் தான் இப்பள்ளியில் பயிலுகின்றனர். வெளியே அதிக பணம் கொடுத்து மேல்நிலைக்கல்வியை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால் சிலர் 10ம் வகுப்போடு முடித்து விட்டு வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையை மாற்றி அமைக்க பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளஸ் 1, 2வுக்கும் ஆங்கில வழிக்கல்வி இந்த கல்வியாண்டிலே அமைத்து தர வேண்டும், என கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை