உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் மாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு

சாத்துார் மாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு

சாத்துார் : சாத்துார் முக்குராந்தல் மாரியம்மன், காளியம்மன் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்து 80 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இரு கோயில்களும் சுதை சிற்பங்களால் ஆனது கற்களால் சுவர்கள் கட்டடப் பட்டுள்ளன.இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சாத்துாரில் உள்ள மாரியம்மன் காளியம்மன் கோயிலுக்கு வந்து இரு சுவாமிகளையும் தரிசனம் செய்துவிட்டு பின்னர் இருக்கன்குடி சொல்லுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.மிகவும் பழமையான இந்த இரு கோயில்கள் தற்போது சிதலமடைந்து சுதை சிற்பங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இரு கோயில்களிலும் பங்குனி பொங்கல் விழா விமரிசையாக நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டும் பூக்குழி இறங்கியும் வழிபாடு செய்வார்கள்.கோயிலை புனரமைக்கவும் கும்பாபிஷேகம் நடத்தவும் பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் இன்று வரை கோயில் நிர்வாகம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடவில்லை இதனால் பக்தர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது பல்வேறு பழமையான கோயில்கள் கும்பாபிஷேகங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் சாத்துாரில் மிகவும் பழமையான மாரியம்மன், காளியம்மன் கோயிலையும் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்து வழிபட வேண்டுமென கோயில் பக்தர்கள் விரும்புகின்றனர்.சாத்துார் பக்தர் அசோக் கூறியதாவது: காளியம்மன், மாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தால் தக்கார், அறங்காவலர்களுக்கு நல்லதில்லை என்ற விசமபிரசாரத்தை நம்பி இக்கோயில்களில் புனரமைப்புபணி, கும்பாபிஷேகம் நடை பெறாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் ஹிந்து சமய அறநிலைத்துறை இரு கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை