உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுதானிய விழிப்புணர்வால் மாவட்டத்தில் கம்பு சாகுபடி ஆர்வம் காட்டும் விவசாயிகள்

சிறுதானிய விழிப்புணர்வால் மாவட்டத்தில் கம்பு சாகுபடி ஆர்வம் காட்டும் விவசாயிகள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சிறுதானியம் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதால் முக்கிய மானாவாரி சாகுபடி பயிரான கம்பு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கம்பு வறட்சியை தாங்கி வளரக்கூடியது. இச்சிறுதானியமானது மாசி, சித்திரை பட்டங்களிலும், ரகங்களுக்கு ஏற்றவாறு ஆடி, புரட்டாசி பட்டங்களிலும் விதைக்கப்படுகிறது. இதில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன. மேலும் மாவுச்சத்து, கார்போஹைட்ரேட் சத்துக்களையும் அதிகளவில் கொண்டுள்ளது. கம்பு தானியம் பல வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் செய்வதற்கும் ஏற்ற வகையில் உள்ளது.பயிர் அறுவடைக்கு வந்ததற்கான அறிகுறியாக அதன் இலைகள் மஞ்சள் நிறத்திலும், உலர்ந்த தோற்றத்திலும் காணப்படும். தானியங்கள் கடினமாக இருக்கும். கதிரெடுத்தல், துாய்மை செய்தல், உலர்த்துதல், சேமித்தல் ஆகியவற்றில் வேளாண்துறையின் பரிந்துரைகளை தவறாமல் பின்பற்றுவதன் மூலம் சேதாரமினறி லாபம் பெற தருகிறது கம்பு.ஒரு உற்பத்தி பொருள் - ஒரு சிறுதானியம் என கடந்த ஆண்டு முழுவதும் சிறுதானிய உற்பத்தியை பெருக்க பல்வேறு விழிப்பணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய கடை திறக்கப்பட்டது. தற்போது ஓட்டலும் திறக்கப்பட்டுள்ளது. அதே போல் மகளிர் குழுக்களில் உள்ள பெண்களும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள விவசாயிகளும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை செய்ய கற்று கொண்டு விற்பனை செய்ய துவங்கினர். இதனால் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கினர். விரைவில் ஆடிப்பட்டம் துவங்க உள்ள நிலையில் பலர் கம்பு சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே மாசிப்பட்டத்தில் நடவு செய்யப்பட்ட பயிரும் தற்போது நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ