உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விமான பயிற்சிகள் : விண்ணப்பிக்க அழைப்பு

விமான பயிற்சிகள் : விண்ணப்பிக்க அழைப்பு

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: தாட்கோமூலம் பிளஸ் டூ அல்லது டிகிரி முடித்த எஸ்.சி., எஸ்.டி.,யை சார்ந்தவர்கள்சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம்.பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி அடிப்படை படிப்பு, சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள், விமான பயண முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றுகள் வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கான செலவீன தொகையான ரூ.95 ஆயிரமும்தாட்கோவால் செய்யப்படும்.பயிற்சி முடித்தால் விமான நிலையங்கள்,சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல், சுற்றுலா துறையிலும் வேலை வாய்ப்பு பெறலாம்.www.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை