உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி பட்டாசு வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி

வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி பட்டாசு வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி

சிவகாசி : சிவகாசியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பட்டாசு வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த தி.மு.க., பிரமுகர் உட்பட4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர்சவுந்தர்ராஜ் 55. இவர் பட்டாசு வியாபாரி. இவர் மே 6ல் வீட்டில் இருந்த போது காலை 11:00 மணி அளவில் காரில் இவரது வீட்டிற்கு வந்த இருவர் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி உள்ளனர்.முறையாக வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்ததாக கூறிய அவர்கள், நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.50 லட்சம் பணம் கேட்டு உள்ளனர். சவுந்தர்ராஜ் தனது உறவினர் மூலம் ரூ.10 லட்சம் கொடுத்துஉள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் மீதி பணத்தை வழங்குமாறு சவுந்தர்ராஜை அலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து மிரட்டி உள்ளனர். இதுகுறித்து சிவகாசி டி.எஸ்.பி., அலுவலகத்தில்சவுந்தர்ராஜ் புகார் அளித்தார். போலி அதிகாரிகளை பிடிக்க அமைக்கப்பட்ட 3 தனிப்படையினர். போலி அதிகாரிகளாக நடித்த சாத்துார் தி.மு.க., கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், சுப்பிரமணி, டிரைவர் மகேஷ் குமாரை பிடித்தனர். அவர்களிடம் போலீசார்விசாரித்ததில், தயில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் திட்டத்தின் படி, சவுந்தர்ராஜிடம் அதிகாரிகள் போல் நடித்து பணம் பறித்ததாக தெரிவித்தனர். சவுந்தர்ராஜின் பள்ளி தோழரும் தி.மு.க., ஒன்றிய பிரதிநிதியுமான கருப்பசாமி, ரமேஷ், சுப்பிரமணி, மகேஷ் குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சவுந்தர்ராஜின் பள்ளி தோழரான தாயில்பட்டி அருகே கோட்டையூரை சேர்ந்த கருப்பசாமி இரு மாதங்களுக்கு முன்னரே சவுந்தர்ராஜிடம் உன் மீது வருமான வரித்துறை சோதனை நடக்க உள்ளது. என்னிடம் பணம் கொடுத்தால் வருமான வரித்துறை விசாரணை இல்லாமல் பார்த்து கொள்கிறேன் எனக்கூறி இருக்கிறார். அதற்கு அவர் மறுக்கவே போலி அதிகாரிகளை அனுப்பி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை