மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
5 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
5 hour(s) ago
சிவகாசி: சிவகாசியில் பைபாஸ் ரோடு போடப்பட்ட 6 மாதங்களில் சிதைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.சிவகாசி சாத்துார் ரோடு விலக்கிலிருந்து செல்லும் பைபாஸ் ரோடு சேதம் அடைந்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு முன்பு ரோடு சீரமைக்கப்பட்டது. மெயின் பஜார் ஆகவும் முக்கிய ரோடாகவும் இருப்பதால் நகருக்குள் வரும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த ரோட்டில் தான் வந்து செல்கின்றன.இந்நிலையில் நாரணாபுரம் விலக்கு அருகே பைபாஸ் ரோடு ஆங்காங்கே சிதைந்துள்ளது. சேதம் அடைந்த இடங்களில் மணல் கொட்டிக் கிடப்பதால் மழைக்காலங்களில் ரோடு சகதியாக மாறிவிடுகின்றது. இதில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது.டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே இப்பகுதியில் சேதம் அடைந்துள்ள ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago