மேலும் செய்திகள்
திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
6 hour(s) ago
மகர நோன்பு அம்பு விடுதல் விழா
6 hour(s) ago
கொத்தனார் பலி
6 hour(s) ago
விஜயதசமி விழா
6 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (அக். 3)
6 hour(s) ago
விருதுநகர் : விருதுநகரில் உள்ள சில அசைவ உணவகங்களில் குளிர் சாதனப் பெட்டியில் சிக்கனை பதப்படுத்தி, நாள் கணக்கில் வைத்து விற்பனை செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, ரோசல்பட்டி ரோடு, நான்கு வழிச்சாலை பகுதிகளில் சைவம், அசைவம் உணவுகளை விற்பனை செய்யும் பல உணவகங்கள் உள்ளது. இங்கு காய்கறிகள், மசாலா பொருட்கள் கெடாமல் இருப்பதற்காக குளிர்சாதன பெட்டிகளை பயன்படுத்துகின்றனர்.ஆனால் சில உணவகங்களில் சிக்கன் பொறிப்பதற்காக மசலாவுடன் மிக்சிங் செய்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடுகின்றனர். இவற்றை வாடிக்கையாளர்கள் கேட்பதற்கு ஏற்ப எடுத்து எண்ணெய்யில் பொறித்து கொடுக்கின்றனர். அன்றைய தினம் விற்பனையாகாத மசாலா தடவிய சிக்கனை குளிர்சாதனபெட்டியில் வைத்து நாள் கணக்கில் விற்பனை செய்கின்றனர்.இதை வாங்கி சாப்பிடும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு அதுவே விஷமாக மாறி பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். மேலும் உணவகங்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்றிதழ் கொடுப்பதுடன் பணிகள் முடிந்து விட்டதாக அதிகாரிகள் இருப்பதால் உணவகங்களின் உரிமையாளர்கள் இதே பாணியில் தொடர்ந்து செயல்படுகின்றனர்.எனவே உணவகங்களில் ஆய்வு செய்து நாள் கணக்கில் பதப்படுத்தி விற்பனை செய்யப்படும் இறைச்சிகளை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago