உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு அதிகரிப்பு

விருதுநகரில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு அதிகரிப்பு

விருதுநகர் : விருதுநகர் பஜார் பகுதிகளில் விசேஷ நாள்களில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில் வரக்கூடிய அதிக சப்ததால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.விருதுநகரின் பஜார் பகுதியில் விசேஷ நாள்களில் ஆங்காங்கே கூம்பு வடிவ ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஆனால் விருதுநகரில் இதன் பயன்பாடு சர்வ சுதந்திரமாக நடந்து வருகிறது.இந்த ஒலிபெருக்கிகள் பெரும்பாலும் தெருக்கள், குறுகலான சந்துகளில் பயன்படுத்தப்பட்டு வந்ததால் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது விருதுநகர் மெயின் பஜாரில் அதிகமாக வாகனங்களில் மக்கள் வந்து செல்லும் போலீஸ் அவுட் போஸ்ட் அருகேயே கம்பு ஊன்றி கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதற்காகன வயர் போலீஸ் அவுட் போஸ்ட்டில் சுற்றி வைக்கப்பட்டுள்ளது.இதன் அருகேயே நகர ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுவது தெரிந்தும் கூடுதலாக கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பொருத்தும் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள், அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே பஜார் போலீஸ் அவுட் போஸ்ட் அருகேயே அமைக்கப்பட்டு செயல்படுத்த காத்திருக்கும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இதை போல நகரின் பிற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை