மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் தமிழ்நாடு கிளை இந்திய தொழில் நுட்பக் கல்விக்கான சங்கம் (ஐ.எஸ்.டி.இ.,) அமைப்பின் 22 வது ஆண்டு வருடாந்திர மாநாடு நடந்தது. கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். தமிழ்நாடு பிரிவு ஐ.எஸ்.டி.இ., தலைவர் சங்கர சுப்பிரமணியன் வாழ்த்தினார். கல்லுாரி முதலாம் ஆண்டு துறை தலைவர் செல்வராணி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, புதுடெல்லி ஐ.எஸ்.டி.இ., தலைவர் பிரதாப்சின் காக ஷேப் தேசாய், அமெரிக்கா இன்டெல் நிறுவனம் பொறியியல் இயக்குனர் ஆனந்தன் அய்யாசாமி, செயலாளர் சவுரி ராஜன், துணைத் தலைவர் பாஸ்கர், மாநில தலைவர் பூர்ண பிரகாஷ் பேசினர். கல்லுாரி டீன் மாரிச்சாமி, பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில் இருந்து 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பேப்பர் பிரசன்டேஷன், புராஜெக்ட் டெக்னிக்கல், வினாடி வினா, பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் பேராசிரியர்கள் செய்தனர்.
12 hour(s) ago
12 hour(s) ago