மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்வாய் பணி தலைமை பொறியாளர் ஆய்வு
13-Aug-2024
ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வரும் பாலப்பணிகளையும் கட்டி முடிக்கப்பட்ட பாலங்களையும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருநெல்வேலி கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி, கோட்ட பொறியாளர் பாக்கிய லட்சுமி தலைமையிலான குழுவினர் ரூ. 13 கோடியில் நடைபெற்ற பாலம் குறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இதன்படி கோபாலபுரம், வரகுணராமபுரம், நத்தம் பட்டி ,எஸ்.ராமலிங்காபுரம் ரோடு ,,தெற்கு வெங்காநல்லுார், மருங்காவூர் கண்மாய், குறிச்சியார்பட்டி, கிழவி குளம் ரோடு பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கும் பால வேலைகளை ஆய்வு செய்தனர். புதிதாக நடைபெற்று வரும் பால பணிகளை மழைக்காலத்திற்கு முன்பு முடிக்க கோரி அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
13-Aug-2024