| ADDED : ஜூன் 08, 2024 05:38 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் சார்ந்த உற்பத்தியை ஊக்குவிக்க பிரதான் மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விண்ணப்பம் செய்து தொழில் தொடங்க வழி நடத்துவதற்கு ஊராட்சி ஒன்றிய அளவிலான மாவட்ட வள நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தேவைப்படுகின்றனர். ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி பார்க்கும் போது வேறு பிற ஒப்பந்தபணியிலோ, தனியார் நிறுவனத்திலோ, அரசு நிறுவனத்திலோ பணி பார்க்கக்கூடாது. இப்பணி முழுக்க முழுக்க களப்பணி. விரும்புவோர் தங்களுடைய சுய விபரம் அடங்கிய விண்ணப்பத்தை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு தபால் மூலம் அல்லது நேரிலோ ஜூன் 20க்குள் அளிக்க வேண்டும், என்றார்.