உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓய்வூதிய ஆயுள் சான்று சமர்ப்பிக்க அழைப்பு 

ஓய்வூதிய ஆயுள் சான்று சமர்ப்பிக்க அழைப்பு 

விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் காளிதாஸ் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம், உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 60 வயது முடிவடைந்த உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஆண்டுதோறும் ஏப்ரலில் tnuwwb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் எண், ஸ்மார்ட் கார்டு, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, வங்கி கணக்கு எண், புகைப்படம் ஆகிய விவரங்களுடன் இணையதளத்தில் ஆயுள் சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆயுள் சான்று அளித்த ஓய்வூதியதாரர்களுக்கு மட்டுமே தொடர்ந்து ஓய்வூதியம் அனுமதிக்கப்படும் என்பதால் இதுவரை ஆயுட்சான்று சமர்ப்பிக்காத 579 ஓய்வூதியதாரர்களும் ஜூன் இறுதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை