உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செம்பொன் நெருஞ்சியில் ஜல்லிக்கட்டு

செம்பொன் நெருஞ்சியில் ஜல்லிக்கட்டு

நரிக்குடி : நரிக்குடி செம்பொன்நெருஞ்சியில் நடந்த ஜல்லிக்கட்டு விழா நடந்தது.நரிக்குடி செம்பொன்நெருஞ்சியில் அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. 386 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு துவக்கி வைத்தார்.முதல் காளையாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு 25 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். துள்ளி வந்த காளைகளை, காளையர்கள் தீரத்துடன் அடக்கினர். வெற்றி பெற்ற வீரர்கள், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கு கட்டில், ஏர்கூலர், பீரோ, அண்டா, டிவி, அலைபேசி, மின்விசிறி, ரொக்கம் பரிசுகளாக வழங்கப்பட்டன.

3 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் 3 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வீரர்களுக்கும், காளைகளுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுவினர், 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை