உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பொறியியல் கல்லுாரியில் காமராஜர் பிறந்த நாள் விழா

பொறியியல் கல்லுாரியில் காமராஜர் பிறந்த நாள் விழா

விருதுநகர், ; விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் காமராஜரின் 122வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட்டது.கல்லுாரியின் நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர். அதன் பின்பு ஆயிரம் கல்லுாரி மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து மைதானத்தில் காமராஜரின் முகத்தை மனித சங்கிலியாக நின்று உருவாக்கினர். முதல்வர் செந்தில் வரவேற்றார். செயலாளர் தர்மராஜன், சிறப்பு விருந்தினர் பொன்குமரன், பொருளாளர் ஸ்ரீமுருகன், துணை தலைவர் பாலகிருஷ்ணன் பேசினர். காமராஜரின் வாழ்க்கை நிகழ்வுகளையும், தியாகங்களையும், தொண்டுகளையும் குறித்து பேசினர்.கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்று, பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லுாரியின் முன்னாள் தலைவர் முரளிதரன், ஷீலா தேவி பங்கேற்றனர். உதவி பேராசிரியர் ஹரிபிரசாத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை