உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேய்ச்சல் நிலமாக மாறும் கண்மாய்கள்-- போதிய மழை இன்றி கால்நடைகள் தவிப்பு

மேய்ச்சல் நிலமாக மாறும் கண்மாய்கள்-- போதிய மழை இன்றி கால்நடைகள் தவிப்பு

சேத்துார்: ராஜபாளையம் சுற்று வட்டாரத்தில் அதிக மழை பெய்தும் கண்மாய்கள் வறண்டு காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ராஜபாளையம் வட்டத்தில் கோடை கால சராசரி மழை அளவைவிட கூடுதலாக பெய்ததால் பெரும்பாலான நீர்வரத்து ஒட்டிய கண்மாய்கள் நிரம்பின.நெல் சாகுபடிக்கு தொடர்ந்து நீர் இருப்பினை உபயோகித்ததால் கண்மாயில் தேக்கிய தண்ணீர் விரைந்து வற்றும் நிலையை அடைந்துள்ளது. தற்போது மேல் காற்று தொடங்கியுள்ள நிலையில் வேகமாக வற்றி ஏற்கனவே உள்ள குறைந்த அளவு தண்ணீரும் குறைந்து வருகிறது. சாகுபடி பகுதிகளில் பயிர்கள் அறுவடை செய்தும் அதற்கு முந்திய நிலையில் உள்ளதால் மேய்ச்சல் நிலங்கள் குறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் தேவதானம் பெரியகுளம் கண்மாய் பரப்பில் பாசனத்திற்கு தண்ணீர் வெளியேறி வருவதால் நீர் பரப்பு குறைந்து கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக கை கொடுத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை