உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஐ.ஐ.டி.,யில் சேர்ந்த ---ஆதி திராவிடர் பள்ளியில் படித்த மாணவனுக்கு பாராட்டு

ஐ.ஐ.டி.,யில் சேர்ந்த ---ஆதி திராவிடர் பள்ளியில் படித்த மாணவனுக்கு பாராட்டு

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்திர போஸ். மனைவி சுமதி. 100 நாள் வேலை திட்ட பணியாளர். இவர்களது மூன்றாவது மகன் பார்த்தசாரதி.இவர் சுந்தர்ராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி 12 ம் வகுப்பு முடித்து ஜே.இ.இ., மெயின்ஸ் நுழைவு தேர்வுக்கு பள்ளியில் இருந்தபடியே ஆன்லைனில் படித்து தேர்ச்சி அடைந்தார்.ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னை சைதாப்பேட்டை பயிற்சி மையத்தில் இரண்டு மாதங்கள் தங்கி இலவசமாக பயிற்சி எடுத்துள்ளார்.தேர்வு முடிவுகள் ஜூன் 9ல் வெளியான நிலையில் 112 மதிப்பெண்கள் உடன் இந்திய அளவில் 740 வது இடம் பிடித்து தேர்ச்சி அடைந்துள்ளார்.இவருக்கு சென்னை ஐ.ஐ.டி.,யில் விண்வெளி துறை தொடர்பான படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது. அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று முதன் முதலில் ஐ.ஐ.டி., யில் நுழையும் மாணவன் என்ற சிறப்பை பெற்றதற்காக கலெக்டர் ஜெயசீலன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி