மேலும் செய்திகள்
பயிர் காப்பீடு அவகாசம் நீட்டிப்பு
13-Aug-2024
விருதுநகர்,: தோட்டக்கலை துணை இயக்குனர் சுபாவாசுகி செய்திக்குறிப்பு:பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சொந்த, குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்யலாம்.மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டிற்கு பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் வாழை பயிருக்கு சிவகாசியில் மங்கலம், திருத்தங்கல் குறுவட்டங்கள், வத்திராயிருப்பு நத்தம்பட்டி காப்பீடு செய்வதற்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் ப்ரீமியம் தொகையாக ஒரு ஏக்கர் வாழை பயிருக்கு ரூ.3404 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வாழை பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் செப். 16. ஆணவங்களுக்கு கூட்டுறவு வ ங்களில் விண்ணப்பங்களை பயிர்க்காப்பீடு செய்யலாம், என்றார்.
13-Aug-2024