உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மகனின் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள்

மகனின் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள்

விருதுநகர்,:விருதுநகரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் 48. இவர் மகனின் நண்பர் மைதீன் பாட்ஷாவை27, தகாறில் குத்திக்கொலை செய்த வழக்கில் இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.விருதுநகர் கொப்பன் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரின் மகன் செல்லபாண்டி 28, சொத்தில் பங்கு கேட்டு தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்தார். ஆனால் சுந்தர்ராஜ் மறுத்து விட்டார். இதனால் செல்லப்பாண்டி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நண்பர் மைதீன் பாட்ஷா 28, ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் சுந்தர்ராஜ் காயமடைந்தார். இந்த வழக்கில் நண்பர்கள் இருவரும் சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்தனர்.2018 ஜூன் 16ல் முத்துராமன்பட்டி டீக்கடையில் மைதீன் பாட்ஷா நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த சுந்தர்ராஜ் ஏற்கனவே இருந்த தகராறில் கத்தியால் குத்தியதில் மைதீன் பாட்ஷா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த வழக்கில் விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிபதி டி.வி., ஹேமானந்த குமார், சுந்தர்ராஜ்-க்கு ஆயுள் தண்டனை, ரூ. 500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ