உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கூலி தொழிலாளி கொலை இருவருக்கு ஆயுள் சிறை

கூலி தொழிலாளி கொலை இருவருக்கு ஆயுள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பில் கூலி தொழிலாளி பாண்டி45, என்பவரை அடித்து கொன்ற வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த செந்தில், பாலகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும்ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.வத்திராயிருப்பு மேலப்பாளையம் தெருவை சேர்ந்தவர் பாண்டி,45, கூலித்தொழிலாளி. இவர் அதை ஊரைச் சேர்ந்த பெருமாள்சாமியை, டீக்கடையில் ஏற்பட்ட தகராறில், அவரை அடித்தார்.இதனால் ஏற்பட்ட விரோதத்தில் 2017 செப். 11 காலை 9:00 மணிக்கு வீட்டில் இருந்த பாண்டியை, பெருமாள்சாமியின் மகன் செந்தில் 37, மற்றும் பாலகிருஷ்ணன்,38 ஆகியோர் கம்பியாலும், கட்டையாலும் அடித்துக் கொலை செய்தனர். வத்திராயிருப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் செந்தில் மற்றும் பாலகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கஜரா ஆர்.ஜி. ஜி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ