உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காட்டுப் பன்றிகளால் மக்காசோளம் பாழ்

காட்டுப் பன்றிகளால் மக்காசோளம் பாழ்

திருச்சுழி : திருச்சுழி அருகே விளைந்த மக்காச்சோள பயிர்களை பன்றிகள் தின்று பாழாக்கியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.திருச்சுழி அருகே கல்லுாரணி, மேல குருணை குளம், மடத்துப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம், கடலை உட்பட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.மக்காச்சோளத்தை அமெரிக்கன் படைப்புழு, கடலைக்கு இலை சுருட்டல் வேர் பூச்சி தாக்குதல் இவை அனைத்தையும் சரி செய்து மக்காச்சோளம் அறுவடைக்கு தயாராகும் நிலையில், காட்டுப்பன்றிகள் மக்காச்சோள நிலங்களில் புகுந்து அவற்றை பாழாக்கி தின்று நாசம் செய்துள்ளன.இதனால் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் ஒன்றும் இல்லாமல் போனதாக விவசாயிகள் புலம்புகின்றனர். ஆண்டுதோறும் இதே தொடர்கதையாக உள்ளது. காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏதாவது நடவடிக்கை எடுத்து மக்காசோள விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி