உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விஜய் வருகையால் தனது கூடாரம் காலியாகும் என சீமானுக்கு பயம் மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து

விஜய் வருகையால் தனது கூடாரம் காலியாகும் என சீமானுக்கு பயம் மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து

சிவகாசி:நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தால் தனது கூடாரம் காலியாகும் பயம் சீமானுக்கு ஏற்பட்டுள்ளது என மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறினார்.சிவகாசியில் எம்.பி.,தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம், குளியல் தொட்டி, மேல்நிலை குடிநீர் தொட்டி ஆகியவற்றை திறந்து வைத்த அவர் கூறியதாவது: தமிழகம் அனைவரின் மொழியையும் நம்பிக்கையும் போற்றுகின்ற மண்ணாக உள்ளது. நடிகை கஸ்துாரியின் பேச்சு வெறுப்பு அரசியலின் மையமாக உள்ளது. நடிகர் விஜயின் அரசியல் வருகையால் தனது கூடாரம் காலியாகும் என சீமானுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. வயநாட்டில் பிரியங்கா வெற்றி பெறுவது உறுதி. அவரின் அரசியல் வருகை மோடி, அமித்ஷாவின் வெறுப்பு அரசியலுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.விஜய் கொள்கைக்கும், தி.மு.க., கொள்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் எச்.ராஜா பேசுகிறார். பா.ஜ., தமிழர்களுக்கு எதிரான கட்சி. தமிழகத்தில் தி.மு.க., காங்., கூட்டணி, நீண்ட காலம் நிலையான உறவு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை