உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேல மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்

மேல மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்

சேத்துார்: தேவதானம் மேல மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.சேத்துார் அடுத்த தேவதானத்தில் மேல மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்ற விழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்களுடன் வழிபாடு நடந்தது. அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியை தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடந்தது.முக்கிய நிகழ்வாக மார்ச் 29ல் பூக்குழி விழா நடக்கிறது. சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை மேல மாரியம்மன் கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி